தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 9 April 2022 5:41 PM IST (Updated: 9 April 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

ஆரணி

ஆரணியை அடுத்த ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 50), விவசாயி. 

இவரின் நிலத்துக்குச் செல்லும் பாதையில் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. 

இதனால் அடிக்கடி ஏற்படும் தகராறு குறித்து போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனால் மனமுடைந்த பழனி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து பழனியின் மனைவி சங்கீதா ஆரணி தாலுகா போலீசில் புகார் ெசய்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story