வாழ்வாதாரத்தை மேம்டுத்த மகளிர் குழுவினர் சிறுதொழில் தொடங்க வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு
மகளிர் குழுவினர் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்டுத்த சுயதொழில் தொடங்க வேண்டுமென கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.
திருப்பத்தூர்
மகளிர் குழுவினர் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்டுத்த சுயதொழில் தொடங்க வேண்டுமென கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
சுயதொழில் தொடங்க வேண்டும்
மாவட்டத்தில் 5,665 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு தொழில்கள் தொடங்க வேண்டும். சிறு தொழில் தொடங்கும் அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் தேவையான வங்கிக் கடன் வசதி செய்து தரவேண்டும். மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு முனை தீர்வுகுழு
இதேபோல் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கலெக்டர் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்கள், ஆரம்பிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், அவற்றை களைவதற்கு அந்தந்த மாவட்ட தொழில் மைய அலுவலகங்களின் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருமுனை தீர்வு குழு செயல்பட்டு வருகிறது.
இடர்பாடு குறித்த விண்ணப்பங்களின் மீது சம்பந்தபட்ட அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, கண்காணிப்பாளர் சுரேஷ், மாவட்ட சுற்றுசூழல் அலுவலரர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story