நாகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 6:01 PM IST (Updated: 9 April 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
பெட்ரோல், டீசல், கியாஸ் வில0ை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாகை அபிராமி அம்மன் சன்னதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செய்யது அனஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தனபாலன், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, பிரான்சிஸ், மகளிர் அணி துணை பொறுப்பாளர் மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கோஷங்கள் 
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம் பிரசாந்த், மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் கண்ணன், தொழிலாளர் அணி அமைப்பாளர் செய்யது சாஹிப் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
---


Next Story