போக்குவரத்துக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டவர் கைது


போக்குவரத்துக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 9 April 2022 6:07 PM IST (Updated: 9 April 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டவர் கைது

ஆரணி

கண்ணமங்கலத்தை அடுத்த வாழியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர், கண்ணமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது அந்த வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்ட கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வெங்கடேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story