ஊட்டியில் பலத்த மழை
ஊட்டியில் பலத்த மழை
ஊட்டி
ஊட்டியில் இன்று காலையில் வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, எமரால்டு, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலை காய்கறிகள், தேயிலை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி, மழவன்சேரம்பாடி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு, தாளூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. சாலைகளிலும், கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எருமாட்டில் நேற்று இரவில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டியாட்டுகுன்னுவில் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-9, குந்தா-10, அவலாஞ்சி-25, எமரால்டு-28, பாலகொலா-13, பர்லியார்-12, கேத்தி-14, எடப்பள்ளி-18, சேரங்கோடு-15.
Related Tags :
Next Story