டிராக்டர் மோதி தொழிலாளி பலி


டிராக்டர் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 April 2022 8:15 PM IST (Updated: 9 April 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.

குருபரப்பள்ளி:
மகராஜகடை அருகே உள்ள பெரியகோட்டப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி-மகராஜகடை சாலையில் போதிநாயனப்பள்ளி மகபூப் நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிஅரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கார்த்திக் இறந்துவிட்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story