நவிமும்பையில் ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்ட பீகார் கும்பல் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 April 2022 8:20 PM IST (Updated: 9 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்ட பீகார் கும்பலை போலீசார் கைது செய்தனர்

மும்பை, 
நவிமும்பையில் ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்ட பீகார் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். மோசடி
நவிமும்பையில் ஏ.டி.எம். மையங்களில் வங்கி வாடிக்கையாளர்களை திசை திருப்பி அவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை திருடி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வந்த புகார்களின் பேரில் போலீசார் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மோசடி கும்பலை சேர்ந்தவர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் ஏ.டி.எம். மோசடிகளில் தொடர்புடையவர்கள் தானே கர்னாலா பகுதிக்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஏ.டி.எம். மோசடியில் தொடர்புடைய 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 89 திருட்டு ஏ.டி.எம். கார்டுகள், பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
பீகார் கும்பல்
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் பீகாரை சேர்ந்த பச்சா மகாவீர்(43), முனிலால் (25), நவின் இந்தார் (24), நரேஷ்குமார் (31), சுனில் (26), படாய் (28), அவதேஷ் (28), முகமது ரிஷ்வான் (32) என்பது தெரியவந்தது. 
இவர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, அவர்களின் ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்டு போலி கார்டை அவர்களிடம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story