மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 8:51 PM IST (Updated: 9 April 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டரை பாடை கட்டி தூக்கி வந்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நாகர்கோவில், 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே போல குமரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது காலி கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடை கட்டி தூக்கி வந்து இருந்தனர். அதன் அருகில் ஒருவர் சங்கு ஊதி கொண்டு இருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் சசி ஜெயபிரகாஷ், பெரி இவான்ஸ், ஜோசப் கெனி ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல செயலாளர்கள் பிரேம்குமார் பர்னா, ஜிம்மி பவுன்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. 

Next Story