‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பகலில் எரியும் தெருவிளக்கு
சின்னமனூர் ஒன்றியம் அழகாபுரியில் பொது மயானம் அருகே உள்ள தெருவிளக்கை முறையாக அணைப்பது இல்லை. இதனால் பகலில் கூட தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
-ரவி, அழகாபுரி.
பள்ளி வளாகத்தில் மர்மநபர்கள்
வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு நுழைவுவாயில் இரவில் பூட்டப்படுவது இல்லை. இதனால் இரவில் மர்மநபர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பள்ளியின் நுழைவுவாயிலை இரவில் அடைக்க வேண்டும்.
-அக்கிம், வத்தலக்குண்டு.
சாக்கடை கால்வாய் வசதி
திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்புள்ள சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் முழுமையாக மூடிவிட்டது. இதனால் மழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. எனவே புதிதாக சாக்கடை கால்வாய் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
திறந்தவெளி கழிப்பறையான சாலை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரவுண்டுரோட்டுக்கு செல்லும் சாலையின் ஓரம் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்வதை பெரும்பாலான மக்கள் தவிர்க்கும் நிலை உள்ளது. திறந்தவெளி கழிப்பிடமாக சாலை மாறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், திண்டுக்கல்.

Related Tags :
Next Story