மருமகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாமியார் சாவு; கொலை வழக்காக மாற்றம்


மருமகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாமியார் சாவு; கொலை வழக்காக மாற்றம்
x
தினத்தந்தி 9 April 2022 10:09 PM IST (Updated: 9 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மருமகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாமியார் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஆரோக்கிய மேரி (வயது 57). இவர்களுடைய மகள் ஐசுவர்யாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் கருப்பசாமிக்கும் (24) திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி குடும்ப பிரச்சினை தொடர்பாக கருப்பசாமிக்கும், மாமியார் ஆரோக்கிய மேரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அவருடைய தம்பி முனியசாமி (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் ஆரோக்கியமேரியை வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, முனியசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆரோக்கியமேரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கருப்பசாமி, முனியசாமி ஆகியோர் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்தனர்.

Next Story