தர்மபுரியில் மாநில கைப்பந்து போட்டி தொடக்கம்


தர்மபுரியில் மாநில கைப்பந்து போட்டி தொடக்கம்
x
தினத்தந்தி 9 April 2022 10:20 PM IST (Updated: 9 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது.

தர்மபுரி:
தர்மபுரி பாய்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி தர்மபுரியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் மின்னொளியில் நடைபெறும் இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, வேலூர், மதுரை, தேனி, தர்மபுரி, சென்னை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு  விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியிகள் தொடக்க விழாவுக்கு மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.என்.வி.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர்கள் விஷ்ணுசந்தர், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இன்று இறுதி போட்டிகள் மற்றும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

Next Story