சிதம்பரத்தில் போலீஸ்காரர்களுக்கான மாரத்தான் போட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தொடங்கி வைத்தார்


சிதம்பரத்தில் போலீஸ்காரர்களுக்கான மாரத்தான் போட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 April 2022 10:27 PM IST (Updated: 9 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் போலீஸ்காரர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.


சிதம்பரம், 

சிதம்பரத்தில் நகர போலீசார் சார்பில் போலீஸ்காரர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதையொட்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி அருகே உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமை தாங்கினார். 

சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதில், போலீசாரின் மனவலிமையை உயர்த்தும் வகையில் நடந்த இந்த மராத்தான் போட்டியில் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், கிள்ளை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும்  சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். 

மாரத்தான் போட்டி,  பொறியியல் கல்லூரி அருகே உள்ள ராஜேந்திர சிலை பகுதிக்கு சென்று, மீண்டு்ம் வேளாண் துறை கல்லூரியில் உள்ள ஹெலிபேட் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.  

போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், புத்தகங்களை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் சிதம்பரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி ராமன், சுரேஷ் முருகன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story