மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
சங்கராபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டம் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவமுகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாபிள்ளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமதாஸ், ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகபிள்ளை, துணைத்தலைவர் ஆஷாபீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மேற்பார்வையாளர் கவிதா வரவேற்றார்.
மருத்துவ முகாமினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் டாக்டர்கள் வேல், இசக்கி, வாசவி, கிருத்திகா, எஸ்வந் ஆகியோர் கலந்து கொண்டு காது கேளாதவர்கள், கை கால் குறைபாடு உடையவர்கள், பார்வைத்திறன், உதடு பிளவு குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதித்து உரிய ஆலோசனை வழங்கினர். முகாமில் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story