பூச்சொரிதல் விழா


பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 9 April 2022 10:39 PM IST (Updated: 9 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

இருளாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

போகலூர், 
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் சத்திரக் குடியில் உள்ள சேதுபதி விவேகானந்தாபுரம் இருளாயி அம்மன் கோவிலில் 83-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்பு கிராம மக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த விதவிதமான மலர்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். விழாவையொட்டி இன்னிசை கச்சேரி, கரகாட்ட நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.

Next Story