ரேஷன் கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம்


ரேஷன் கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம்
x
தினத்தந்தி 9 April 2022 10:48 PM IST (Updated: 9 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.


கடலூர், 

வேப்பூர் வட்டம் மாளிகைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் ஏ.மரூர் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ரேஷன் கடை விற்பனையாளர் செல்வகுமார் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், ரேஷன்கடை விற்பனையாளர் செல்வகுமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story