விருத்தாசலத்தில் மக்கள் நீதிமய்யத்தினர் ஆா்ப்பாட்டம்


விருத்தாசலத்தில் மக்கள் நீதிமய்யத்தினர் ஆா்ப்பாட்டம்
x

விருத்தாசலத்தில் மக்கள் நீதிமய்யத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விருத்தாசலம், 

கடலூர் தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார்கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் சொத்து வரி, அத்தியாவசிய மருந்துகள் விலையேற்றம், சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றை  கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர்கள் வில்வம் செல்வகுமார், முருகன், விருதை நகர அமைப்பாளர் வெங்கடகிருஷ்ணன், மங்கலம்பேட்டை நகர அமைப்பாளர் குமார், 

விருதை நகர மகளிர் அணி ஸ்ரீ பிரியா, மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் மாமல்லன், ராஜவேல், நல்லூர் ஒன்றிய செயலாளர் தினேஷ், திட்டக்குடி நகர செயலாளர் ராஜேஷ், நகர அமைப்பாளர் நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விருத்தாசலம் நகர அமைப்பாளர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story