சமரச தீர்வு நாள் நிகழ்ச்சி
ராமநாதபுரம் கோர்ட்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற சமரச தீர்வு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கலந்து கொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கோர்ட்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற சமரச தீர்வு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கலந்து கொண்டார்.
சமரச தீர்வு
தமிழ்நாடு மாற்றுமுறை சமரச தீர்வு மையத்தின் வழிகாட்டு தலின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரச தீர்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா கோர்ட்டு நீதிபதி சுபத்ரா, முதன்மை குற்றவியல் நீதிபதி கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் பேசியதாவது:- முன்பை விட தற்போது கோர்ட்டுகளில் அதிக வழக்குகள் வருகின்றன. இந்த வழக்குகளில் இருதரப்பினருக்கும் வெற்றி பெறும் வகையில் சமரசம் தீர்வு காண இந்த சமரச தீர்வு மையம் உதவுகிறது.
மேல்முறையீடு
இதில் மேல்முறையீடு கிடையாது. கோர்ட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும். சமரச தீர்வு மூலம் வழக்குகள் தீர்க்கப்படுவதால் மற்ற வழக்குகளில் கோர்ட்டு கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
வரும்காலங்களில் சட்ட கல்வியிலும், வக்கீல் தொழிலிலும் சமரச தீர்வு என்பது மிகப்பெரும் பங்கு வகிக்கும், விட்டுக் கொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை என்ற நிலை சமரச தீர்வு மூலம் ஏற்படுகிறது. எனவே, சட்டம் பயின்ற வர்கள் சமரசதீர்வு முறையில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வக்கீல் சங்க செய லாளர் நம்புநாயகம், சட்டக்கல்லூரி மாணவர்கள், சமரச தீர்வு மைய வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story