அகரத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம்
அகரத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது அகரம் பகுதி. இங்கு 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக ஒரு குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அகரத்தில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது செங்கல் சுவர், சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள், நத்தை ஓடுகள், பல சுடுமண் உறைகிணறுகள், சுடுமண் முத்திரை உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ஒரே குழியில் 3 சுடுமண் உறை கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்திலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி ஏற்கனவே கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்டது. கீழடிக்கு சுற்றுலா பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ- மாணவிகள், சமூக ஆர்வலர்கள், வெளிமாநில பார்வை யாளர்கள் எனஅதிகம் பேர் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு கண்டறியப்பட்ட பழங்கால பொருட்களை பார்த்து செல்கின்றனர். அதேபோல் அகரத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க இரும்பு பைப் மூலம் செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன் அகரத்திற்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story