திருவெறும்பூரில் மாவுமில்லில் பதுக்கிய 1,160 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருவெறும்பூரில் மாவுமில்லில் பதுக்கிய 1,160 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி, ஏப்.10-
திருவெறும்பூரில் மாவுமில்லில் பதுக்கிய 1,160 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி
திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியிலுள்ள ஒரு மாவு மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உணவு கடத்தல் தடுப்புபிரிவுபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சனம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை அந்த மாவு மில்லில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பறிமுதல்
அப்போது அங்கு தலா 40 கிலோ எடை கொண்ட 29 மூட்டை மொத்தம் 1160 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளையும், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவுமில்லை நடத்திவந்த இஸ்மாயில் என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story