மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:-
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சரத்பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டு வண்டியில் மொபட் மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டு அதில் மாலையிட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
மேலும் டீசல் விலையை குறைத்து சரக்கு போக்குவரத்தை காப்பாற்று உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்கள் ராம்மோகன், மணிவண்ணன், தாசப்பராஜ், நிஜாமுதீன், சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story