பவானிசாகர் அணை பகுதியில் சுற்றித்திாியும் யானை
பவானிசாகர் அணை பகுதியில் யானை சுற்றித்திாிகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி அமைந்துள்ள புங்கார் கிராமம் அருகே உள்ள நீர்த்தேக்க பகுதியில் உள்ள தார் ரோட்டில் சுற்றி திரிந்தது. இதைப்பார்த்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வறட்சி காரணமாக தண்ணீர் தேடி காட்டுயானைகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு வருகின்றன. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அணை நீர்த்தேக்க பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை ஊழியர்கள், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story