மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 April 2022 2:35 AM IST (Updated: 10 April 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப்.10-
திருச்சி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சரவணன், சதீஷ்குமார், நிக்சன் சகாயராஜ், பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பூமாலை அணிவித்து அவற்றை பாடைகட்டி, ஜங்ஷன் ரவுண்டானவை சுற்றி வந்து ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இறக்கி வைத்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story