தினத்தந்தி புகாா்பெட்டி


தினத்தந்தி புகாா்பெட்டி
x
தினத்தந்தி 10 April 2022 2:46 AM IST (Updated: 10 April 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகளை தொிவி்க்கும் பகுதி.



குவிந்து கிடக்கும் குப்பை 
கோபி அருகே உள்ள கரட்டூர் பிரிவு பகுதியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் 5 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் சிலர் அந்த குப்பையில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் குப்பையில் இருந்து எழும் கரும்புகையால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண் எரிச்சலால் அவதிப்படுவதுடன், மூச்சு விடவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.


ரோட்டில் ஓடும் சாக்கடை கழிவுநீர் 

  எலவமலை ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகரில் சாக்கடை கால்வாய் ஒன்று உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாயில் ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வாரி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராஜா, அண்ணா நகர்.
  


 
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
  பவானி தாலுகா பெரியபுலியூர் ஊராட்சி சேவாக்கவுண்டனூர் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி தூண்களில் காரைகள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். அல்லது புதிய குடிநீர் தொட்டி கட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், சேவாக்கவுண்டனூர்.
  -
  
வீணாகும் குடிநீர் 

  ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இருந்து பெரியவலசு செல்லும் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மகாராஜன், ஈரோடு.

Next Story