மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை,
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல செயலாளர் அழகர் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மணி, அயூப்கான், கதிரேசன், சொக்கர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆம்புலன்சுக்கு மலர் மாலை அணிவித்து கயிறு கட்டி இழுத்தும், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story