சுந்தரனார் விருது வழங்கும் விழா


சுந்தரனார் விருது வழங்கும் விழா
x
தினத்தந்தி 10 April 2022 3:08 AM IST (Updated: 10 April 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பல்கலைக்கழகத்தில் சுந்தரனார் விருது வழங்கும் விழா நடந்தது.

பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுந்தரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சுந்தரனார் விருது வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் மருது குட்டி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி, சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சுந்தரனார் விருதும், ரூ.1 லட்சம் பணமுடிப்பும் தூத்துக்குடியை சேர்ந்த நாவல் எழுத்தாளர் ஸ்ரீதரகணேசனுக்கு வழங்கினார். மத்தியபிரதேசம், சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மணிக்குமார், சுந்தரனார் குறித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

Next Story