நுழைவு தேர்வுகள் மூலம் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம்-கி.வீரமணி


நுழைவு தேர்வுகள் மூலம் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம்-கி.வீரமணி
x
தினத்தந்தி 11 April 2022 12:15 AM IST (Updated: 10 April 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

நுழைவு தேர்வுகள் மூலம் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம் என கி.வீரமணி குற்றம் சாட்டினார்.

வெளிப்பாளையம்:-

நுழைவு தேர்வுகள் மூலம் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம் என கி.வீரமணி குற்றம் சாட்டினார். 

பொதுக்கூட்டம்

நாகை அவுரித்திடலில் தி.க. சார்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா வரவேற்றார். மண்டல தலைவர் முருகையன், நாகை நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகியவை மிகவும் ஆபத்தானவை. இவை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். கல்வி உரிமை என்பது அனைவருக்கும் பிறப்புரிமை ஆகும். தகுதி தேர்வு, நுழைவுத்தேர்வுகள் மூலமாக ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை பறித்துவிட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. 

எதிர்த்து பிரசாரம்

இந்த நிலை நீடித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கிடைப்பது என்பது அரிதாகிவிடும். தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். குலக்கல்வியை விட ஆபத்தானது இந்த நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை. எனவே தான் இதை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டத்தில் தி.க. பொதுச்செயலாளர் சந்திரசேகரன், தி.மு.க. நாகை மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராஜேந்திரன், நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், மனிதநேய மக்கள் கட்சி நாகை மாவட்ட தலைவர் ஜபருல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Next Story