சரத்பவார் வீட்டின் மீது தாக்குதல்- துணை போலீஸ் கமிஷனர், சீனியர் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 April 2022 6:05 PM IST (Updated: 10 April 2022 6:05 PM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் வீட்டின் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து துணை போலீஸ் கமிஷனர் யோகேஷ்குமாா், காம்தேவி சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜ்பார் ஆகியோர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மும்பை, 
சரத்பவார் வீட்டின் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து துணை போலீஸ் கமிஷனர் யோகேஷ்குமாா், காம்தேவி சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜ்பார் ஆகியோர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
துணை கமிஷனர் மீது நடவடிக்கை
மாநில போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சரத்பவார் வீட்டை நோக்கி கல், செருப்பை எரிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்குவரத்து கழக ஊழியர்கள் 110 பேரை கைது செய்து உள்ளனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
இந்தநிலையில் சரத்பவார் வீட்டின் முன் நடந்த தாக்குதலை தடுக்க தவறியதாக சரத்பவார் வீடு அமைந்துள்ள மண்டலத்தின் துணை கமிஷனர் யோகேஷ்குமார், காம்தேவி போலீஸ் சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜ்பார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துணை போலீஸ் கமிஷனர் சவுரப் திரிபாதி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது பொறுப்பு போலீஸ் தலைமையக துணை கமிஷனர் யோகேஷ் குமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருந்தது. தற்போது சவுரப் திரிபாதியின் பொறுப்பு யோகேஷ் குமாரியிடம் இருந்து பறிக்கப்பட்டு, குற்றப்பிரிவு துணை கமிஷனர் நீலோட்பாலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 
இதேபோல சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜ்பார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Next Story