கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர் காவடி விழா

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர் காவடி விழா
x
தினத்தந்தி 10 April 2022 6:59 PM IST (Updated: 10 April 2022 6:59 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர் காவடி விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மலர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர்.

கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர் காவடி விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மலர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர்.
மலர் காவடி விழா
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் நேற்று மலர் காவடி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலசந்தி, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. 
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கோவில் மேல வாசலிலிருந்து மலர் காவடி ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது. 
பக்தர்கள் ஊர்வலம்
இந்த ஊர்வலத்தில் திரளான ஆண், பெண் பக்தர்கள் மலர் காவடி எடுத்து பங்கேற்றனர். ஊர்வலம் கிரி பிரகாரம் மேல ரதவீதி, கிரி பிரகார கீழரத வீதி, நாராயணசாமி கோவில் தெரு, கீழ பஜார் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் எடுத்து வந்த மலர் காவடிகளில் சுமந்து வந்த மலர்களை கொண்டு கழுகாசலமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் முருக பக்தர்கள் பேரவை சார்பில் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில்  போலீசார் செய்திருந்தனர்.

Next Story