பால் விலையை குறைத்ததால் மக்கள் பயன் பெறுகின்றனர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்


பால் விலையை குறைத்ததால் மக்கள் பயன் பெறுகின்றனர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 10 April 2022 7:25 PM IST (Updated: 10 April 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

பால் விலையை குறைத்ததால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் தினந்தோறும் பயன் பெறுகின்றனர் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் விலை குறைப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்ட அன்றைய தினம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுகின்ற விதமாக 5 அம்ச திட்டங்களின் கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில் ஒன்றான ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என்ற உத்தரவு ஒன்றாகும். அத் தகைய உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் நிறுவனத்தின் மூலம் சில்லரை விற்பனையின் கீழ் சமன் படுத்தப்பட்ட பால் 1000 மில்லி ரூ.43-ல் இருந்து ரூ.40 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மில்லி ரூ. 23.50-ல் இருந்து 22 ஆகவும், நிறை கொழுப்பு பால் 500 மில்லி ரூ.25.50 ல் இருந்து ரூ.24 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூபாய் 20-ல் இருந்து 18.50 ஆகவும், டிமேட் எனப்படும் பால் 100 மில்லி ரூ.60-ல் இருந்து ரூ.57 ஆகவும் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 லட்சத்து 7 ஆயிரம் பேர்

அந்தவகையில் இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் ஆவின் பால் வாங்கி பயன் பெறுகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story