தேர்வுக்கு முன்னதாகவே வெளியாவதை தடுக்க திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை அரசே அச்சிட வேண்டும்
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாவதை தடுக்க வினாத்தாள்களை அரசே அச்சிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாவதை தடுக்க வினாத்தாள்களை அரசே அச்சிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூர் தர்மபுரி சாலையில் தமிழ் கலைக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் குழந்தைசாமி, மாவட்ட பிரசார செயலாளர் ஆஜம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் மா.ரவிச்சந்திரன், மாநில சட்ட செயலாளர் அருண்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ஜீவா, மகளிர் இணைச்செயலாளர் செலினா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள். தலைமை நிலைய செயலாளர் தேவசகாயம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு மூலம்நிரப்ப வேண்டும், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளியில் மதிய உணவு திட்டத்தை நீட்டிக்க வேண்டும், கடைநிலை ஊழியர்கள் பணி இடமான உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர் ஆகிய அனைத்து பணியிடங்களையும் உடனடியாக அரசு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரசே அச்சிட வேண்டும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை தனியார் அச்சடித்து வழங்குவதால் தேர்வுக்கு முன்னரே வெளியாகிறது. எனவே அரசே அச்சடித்து அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் வினாத்தாள்கள் வெளியாகாமல் இருக்கும் என கூறினார்.
Related Tags :
Next Story