விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2022 8:01 PM IST (Updated: 10 April 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலை

திருவண்ணாமலை

செங்கம் தாலுகா கல்லரைப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, மேஸ்திரி. இவரது மனைவி நதியா (வயது 27). 

இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. 

இதனால் நதியா கணவரிடம் கோபித்து கொண்டு திருவண்ணாமலை டவுன் பே கோபுரம் தெருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 

கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நதியா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story