தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 321 பேருக்கு பணி நியனமன ஆணை. அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 321 பேருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி நியனமன ஆணை வழங்கினார்.
அரக்கோணம்
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான முகாம் நடத்தியது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் மற்றும் 10-ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்தவர்களை தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்தனர். இதில் 321 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பணி நியனமன ஆணைகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து முகாமில் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.17.30 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், நகராட்சி ஆணையாளர் லதா, நகரமன்ற தலைவர் லடேசுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி, ஒன்றிய குழுத்தலைவர் நிர்மலா சவுந்தர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அம்பிகா பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story