பட்டத்துளசியம்மன் கோவில் தேர் வீதி உலா


பட்டத்துளசியம்மன் கோவில் தேர் வீதி உலா
x
தினத்தந்தி 10 April 2022 8:03 PM IST (Updated: 10 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பட்டத்துளசியம்மன் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது.

கூடலூர்

கூடலூரில் பட்டத்துளசியம்மன் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது. 

பட்டத்துளசியம்மன் கோவில்

கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழா, கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், 9 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7-ந் தேதி காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், மதியம 12 மணிக்கு பால்குட ஊர்வலமும் நடைபெற்றது. 

தொடர்ந்து இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 8-ந் தேதி காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு மேல்கூடலூர் கங்கை ஆற்றங்கரையில் இருந்து மேள-தாளங்கள் முழங்க கரகம் பாலித்து அம்மனை குடி அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

தேர் வீதி உலா

நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு வேல் குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி மேல்கூடலூர் மாரியம்மன், சக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்றார். 

பின்னர் முக்கிய சாலைகள் வழியாக தேர் உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  இன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 3 மணிக்கு மா விளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து அம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story