பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்


பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
x
தினத்தந்தி 10 April 2022 8:03 PM IST (Updated: 10 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்

கூடலூர்

கூடலூர் பகுதியில் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப மலர்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். தற்போது கோடை கால மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அதில் சிறப்பு வாய்ந்த கொன்றை மலர்கள் பற்றி சங்ககால இலக்கியத்தில் அதிகம் பாடப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 15-ந் தேதி கேரள மாநில மக்களால் கொண்டாடப்படும் சித்திரை விஷூ பண்டிகையில் கொன்றை மலர்கள் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இதையொட்டி கொன்றை மலர்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும். இந்த வகை மலர்கள் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் பூத்துக்குலுங்குகிறது. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.


Next Story