நீலகிரி பைசன்ஸ், அணிக்கொரை அணிகள் வெற்றி


நீலகிரி பைசன்ஸ், அணிக்கொரை அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 10 April 2022 8:04 PM IST (Updated: 10 April 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நடந்த மாவட்ட கால்பந்து லீக் போட்டியில் நீலகிரி பைசன்ஸ், அணிக்கொரை அணிகள் வெற்றி பெற்றன.

கோத்தகிரி

கோத்தகிரியில் நடந்த மாவட்ட கால்பந்து லீக் போட்டியில் நீலகிரி பைசன்ஸ், அணிக்கொரை அணிகள் வெற்றி பெற்றன. 

லீக் போட்டி

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் ‘ஏ', ‘பி’ மற்றும் ‘சி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டிகள் கடந்த சில வாரங்களாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக இன்று காலை நடந்த போட்டியில், அணிக்கொரை மற்றும் ரிவர்சைடு பள்ளி கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ரிவர்சைடு பள்ளி அணியை வீழ்த்தி அணிக்கொரை அணி வெற்றி பெற்றது.

நீலகிரி பைசன்ஸ் அணி

அடுத்த போட்டியில் ஜக்கனாரை அணி மற்றும் நீலகிரி எப்.சி. அணிகள் பங்கேற்று விளையாடின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 கோல் போட்டு நீலகிரி எப்.சி. அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து மாலை 3 மணிக்கு ‘ஏ' டிவிஷன் போட்டி நடைபெற்றது. இதில் ஊட்டியை சேர்ந்த மஹாகனி மற்றும் நீலகிரி பைசன்ஸ் அணிகள் பங்கேற்று விளையாடின. 

இந்த போட்டியில் நீலகிரி பைசன்ஸ் அணி ஒரு கோல் போட்டது. ஆட்ட நேர இறுதி வரை மஹாகனி அணி கோல் எதுவும் போடாததால், 1-0 கோல் கணக்கில் நீலகிரி பைசன்ஸ் அணி வெற்றி பெற்றது.  வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தினர் செய்திருந்தனர். இந்த போட்டிகளை ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.


Next Story