தூத்துக்குடியில் பரவலாக மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு


தூத்துக்குடியில் பரவலாக மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 10 April 2022 8:25 PM IST (Updated: 10 April 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பரவலாக பலத்தமழை பெய்ததால் உப்பளங்களில் மழை நீர்தேங்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுத்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் தூத்துக்குடியில் கடும் வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு மேகமூட்டம் காணப்பட்டது. மாலை 4.40 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை பின்னர் லேசாக தூறிக் கொண்டே இருந்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உப்பு உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாசரேத்தில் நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. சாயர்புரம் வட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை பெய்தது. 
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை காடல்குடியில் 2 மில்லி மீட்டர், கோவில்பட்டி- 11, கழுகுமலை- 2, ஓட்டப்பிடாரம் -27, மணியாச்சி -17, சாத்தான்குளம் -2.2, ஸ்ரீவைகுண்டத்தில் 22 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.

Next Story