கோலாப்பூரில் சிவசேனாவின் தோல்விக்கு பா.ஜனதாவே காரணம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 April 2022 9:11 PM IST (Updated: 10 April 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

கோலாப்பூரில் 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவின் தோல்விக்கு பா.ஜனதாவே காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார்.

மும்பை, 
கோலாப்பூரில் 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவின் தோல்விக்கு பா.ஜனதாவே காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார்.
பா.ஜனதா காரணம்
கோலாப்பூர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். அந்த தொகுதியில்  12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் போட்டியிடுகிறார். 
இந்தநிலையில்  முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக காணொலி காட்சி மூலம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:- 
2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2019-ல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் கோலாப்பூர் வடக்கு தொகுதியில் அதிகரித்தது. இதன் காரணமாக அப்போது பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருந்த போதும் சிவசேனா தோல்வி அடைந்தது. 2019-ல் கோலாப்பூர் பா.ஜனதா வாக்குகள் எங்கே போனது?. நீங்கள் அந்த நேரத்தில் காங்கிரசுடன் மறைமுக கூட்டணி வைத்து இருந்தீர்களா?. அப்போது சிவசேனாவின் தோல்விக்கு பா.ஜனதா தான் காரணம்.
பின்வாங்கியது ஏன்?.
பா.ஜனதா பால் தாக்கரே மீது மரியாதை இருப்பதாக கூறுகிறது. அப்போது நீங்கள் மும்பை - நாக்பூர் விரைவு சாலைக்கு அவரது பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?.
நான் கோவிலாக கருதும் பால் தாக்கரேவின் அறையில் அமித்ஷா கொடுத்த வாக்குறுதியில் இருந்து பா.ஜனதா பின்வாங்கியது ஏன்?. மகாவிகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. எனவே தான் நாங்கள் கோலாப்பூர் வடக்கு தொகுதியை கேட்கவில்லை.
 இவ்வாறு அவர் பேசினார்.


Next Story