ராஜகோபாலசாமி கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவம்
மன்னார்குடி அருகே ஏத்தகுடி ராஜகோபாலசாமி கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த ஏத்தகுடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவில் கொடிமரத்தில் கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை மன்னார்குடி பிரசன்னா தீட்சிதர் ஏற்றிவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 19-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் புன்னை வாகனம், சூர்யபிரபை, பல்லக்கு, வெண்ணெய்தாழி உற்சவங்கள் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story