கஞ்சா விற்பனை செய்த 17 பேரை போலீசார்கைது
கஞ்சா விற்பனை செய்த 17 பேரை போலீசார்கைது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்த 17 பேரை போலீசார்கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனை
போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவுபடி திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்ேபாது கஞ்சா கடத்தியவர்களை கண்டு பிடித்து அவர்கள் பயன்படுத்தி வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி கஞ்சா சோதனை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி சேவூர், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசிபாளையம், உடுமலை, மடத்துக்குளம், வெள்ளகோவில், காங்கயம், பெருமாநல்லூர், தாராபுரம், குன்னத்தூர், குடிமங்கலம், அவினாசி ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா பறிமுதல்
அவர்களிடம் இருந்து மொத்தம் 8 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story