ரூ.1 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி
கல்வராயன்மலையில் ரூ.1 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் தொரடிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது வண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மட்டப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டகப்பாடி வரை தார்ச்சாலை அமைக்க ரூ.1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர்கள் அருண்ராஜா, பணி மேற்பார்வையாளர் சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், கல்யாணிகிருஷ்ணன், ரத்தினம், துணைத் தலைவர் சித்ரா சந்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story