நோட்டம் பார்த்த சிறுவனும் சிக்கினான்
கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் நோட்டம் பார்த்த சிறுவனும் சிக்கினான்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி காதல் ஜோடியிடம் 3 பேர் கொண்ட கும்பல் நகை மற்றும் பணத்தை பறித்ததுடன் காதலன் கண்முன்னே மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சாயல்குடி போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கே.வேப்பங்குளம் பத்மேஸ்வரன் (வயது24), நத்தகுளம் தினேஷ்குமார் (23), பசும்பொன் அஜித் விக்னேஷ்வரன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அடையாள அணிவகுப்பில் குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினர். இதை தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கூட்டு பலாத்கார சம்பவத்தின்போது அந்த பகுதியில் யாரும் வந்து விடாத வகையில் அவர்களில் ஒருவரின் தம்பி நின்று நோட்டம் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து 17 வயதுடைய அந்த சிறுவனை கைது செய்த சாயல்குடி போலீசார் பரமக்குடி இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி மதுரை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story