மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொடூரக் கொலை


மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொடூரக் கொலை
x
தினத்தந்தி 11 April 2022 1:03 AM IST (Updated: 11 April 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். விபத்து நாடகமாடிய அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
நெல்லையில் மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். விபத்து நாடகமாடிய அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நண்பர்கள்
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ.காலனி திருமால் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் முத்து ஹரி (வயது 23). இவரது நண்பர்கள் கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் (33), கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் (30), பெருமாள்புரம் என்.எச். காலனியை சேர்ந்த சுகுமார் (30), சாந்தி நகரை சேர்ந்த பிரித்தம் (22). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்துமுத்து ஹரி கீழே விழுந்து விட்டதாக கூறி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ேசர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

சாவில் சந்தேகம்
இந்த நிலையில் முத்து ஹரி சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் லட்சுமி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் வழக்குப்பதிவு செய்தார். 
மேலும் ஜோஸ் செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
முத்து ஹரி, ஜோஸ் செல்வராஜ் உள்ளிட்ட 5 பேரும் நேற்று முன்தினம் இரவு சாந்திநகரில் உள்ள பிரித்தம் வீட்டின் மாடியில் வைத்து ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே ஜோஸ் செல்வராஜ் மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. அதனை முத்து ஹரி தான் திருடினார் என்று கூறி 4 பேரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கொடூரக்கொலை
தகராறு முற்றவே 4 பேரும் சேர்ந்து முத்து ஹரியை மாடியில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த முத்து ஹரியை அவர்களே மீட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்து நாடகமாடி உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து ஹரி இறந்துவிட்டார். 
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

4 பேர் கைது
இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் செல்வராஜ், செல்வகுமார், சுகுமார், பிரித்தம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
நெல்லையில் மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபரை அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story