முதுகுளத்தூர் அருகே முதுமக்கள்தாழி கண்டுபிடிப்பு


முதுகுளத்தூர் அருகே முதுமக்கள்தாழி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 1:28 AM IST (Updated: 11 April 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டது

சிவகங்கை,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா நல்லுக்குறிச்சி பஞ்சாயத்து ஆம்புள்கொட்டம் பகுதியில் உள்ள ஒரு ஊருணியில் பழமையான பானைகள் புதைந்து இருப்பதாக கீழக்கொடுமலூர் கருப்புராஜா அளித்த தகவலின்படி பாண்டி நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-  நல்லுக்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆம்புள்கொட்டம் தார்ச்சாலை அருகே உள்ள சிறிய ஊருணியில் முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையில் அதிக அளவு காணப்பட்டன. ஓடுகளின் உட்பகுதி கருமை நிறத்திலும், வெளிப்பகுதி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. மேலும் கருமைநிற ஓடுகளும் சிவப்புநிற ஓடுகளும் உள்ளன. மேலும் ஓடுகளின் மேற்புறத்தில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த தாழிகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப் படுகிறது. இங்கு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story