பள்ளி மாணவியை கடத்திய சிறுவன் கைது
சேலம் அருகே பள்ளி மாணவியை கடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் வீட்டுக்கு அதே ஊரை சேர்ந்த 18 வயது சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை மிரட்டி மோட்டார் சைக்கிளில் சிறுவன் கடத்தி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் தாயார் கொண்டலாம்பட்டியில் உள்ள மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை சிறுவன் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடத்தப்பட்ட சிறுமியை மீட்டதுடன், சிறுவனையும் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பள்ளி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story