15 வழித்தடங்களில் புதிய பஸ்கள்


15 வழித்தடங்களில் புதிய பஸ்கள்
x
தினத்தந்தி 11 April 2022 1:43 AM IST (Updated: 11 April 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

15 வழித்தடங்களில் புதிய பஸ்களை அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரை, 

15 வழித்தடங்களில் புதிய பஸ்களை அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

இலவச பயணம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர் பஸ் நிலையத்தில் 15 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவைகள் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் திருவம்பலம்பிள்ளை வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு புதிய பஸ் சேவைகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

புதிய சேவைகள்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி வேண்டி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், தொண்டைமான்பட்டி- பெரியார் நிலையம், கடவூர்- எம்.ஜி.ஆர். நிலையம் (அண்ணா நிலையம் வழியாக), சீகுபட்டி- பெரியார் நிலையம், சின்னப்பட்டி- பெரியார் நிலையம், வெளிச்சநத்தம்- எம்.ஜி.ஆர். நிலையம் (கடச்சனேந்தல் வழியாக), பாறைப்பட்டி-பெரியார் நிலையம், கூழப்பாண்டி- பெரியார் நிலையம், மாரணிவாரியேந்தல்- பெரியார் நிலையம், பார்க் டவுன் - விமான நிலையம், ஆரப்பாளையம்- எம்.ஜி.ஆர் நிலையம் (தபால் தந்திநகர் வழியாக).
குலமங்கலம்- பெரியார் நிலையம் (தபால் தந்தி நகர் வழியாக), குலமங்கலம்- ஆரப்பாளையம் (ஆனையூர் வழியாக), அழகர்கோவில்- ஆரப்பாளையம் (ஆனையூர், ஊமச்சிகுளம் வழியாக), அழகர்கோவில்- பெரியார் நிலையம் (தெற்கு வாசல், ஊமச்சிகுளம் வழியாக), மிளகரணை- பெரியார் நிலையம் என 15 புதிய சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவியர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story