தி.மு.க. பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கடையநல்லூரில் தி.மு.க. பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
அச்சன்புதூர்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்கம், உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடையநல்லூர் மார்க்கெட் அருகே நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகமது அலி வரவேற்றார். மாநில தொண்டரணி செயலாளர் உமாபதி, மதுரை சேவியர், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான், புளியங்குடி நகரமன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமையா, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன், தென்காசி ஒன்றியக்குழு தலைவர் சேக் அப்துல்லா, கடையநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், செங்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் திருமலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவரணி துணை அமைப்பாளர் பெருமாள்துரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story