மரத்தில் மோதி கார் தீப்பிடித்தது;நகை வியாபாரி உள்பட 2 பேர் உயிர் தப்பினர்


மரத்தில் மோதி கார் தீப்பிடித்தது;நகை வியாபாரி உள்பட 2 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 11 April 2022 2:09 AM IST (Updated: 11 April 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே மரத்தில் ேமாதி கார் தீப்பிடித்தது. இதில் நகை வியாபாரி, அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே மரத்தில் ேமாதி கார் தீப்பிடித்தது. இதில் நகை வியாபாரி, அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கார் தீப்பிடித்தது

மதுரையை சேர்ந்த நகை வியாபாரி சரவணன் (வயது 40). தனது உறவினர் கவுதம் (27) உடன் தான் வாங்கிய புதிய காரில் தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு சென்றனர். அங்கு உள்ள நண்பரின் நோன்பு விரதத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் காரில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சரவணன் ஓட்டி வந்தார். வரும் வழியில் நள்ளிரவு 12 மணி அளவில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி விலக்குப் பகுதியில் கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் திடீரென கார் தீப்பிடித்தது. உடனே கார் கதவை திறந்து சரவணனும், கவுதமும் வெளியே குதித்தனர். சிறிது நேரத்தில் காரில் பற்றிய தீ மளமளவென எரிந்தது.

தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்

 இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் பாண்டி, திருமங்கலம் நிலைய அதிகாரி விஜயராணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுமையாக எரிந்து விட்டது இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story