திம்பம் மலைப்பாதையில் இரவு போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடியில் கடையடைப்பு போராட்டம்; இன்று நடக்கிறது

திம்பம் மலைப்பாதையில் இரவு போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடியில் கடையடைப்பு போராட்டம்; இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 11 April 2022 2:18 AM IST (Updated: 11 April 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. 
போக்குவரத்துக்கு தடை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி முதல் காரப்பள்ளம் வரை இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். 
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘காய்கறிகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் எப்போதும் செல்லலாம் எனவும், உள்ளூர் கிராம மக்கள் அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யவும், 12 சக்கர வாகனங்கள் மற்றும் 16.2 டன் எடைக்கு குறைவாக உள்ள வாகனங்கள் மட்டுமே திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதித்தும்,’ உத்தரவிட்டது. 
கடையடைப்பு
இந்த நிலையில் நேற்று தாளவாடி விவசாய சங்க தலைவர் கண்ணையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திம்பம் மலைப்பாதை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் யுவபாரத் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில், ‘திம்பம் மலைப்பாதை தடையை முழுமையாக நீக்க வலியுறுத்தி சத்தியமங்கலம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் 11-ந் தேதி (அதாவது இன்று திங்கட்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்,’ என முடிவு செய்யப்பட்டது. இதில் விவசாயிகள், வணிகர்கள், வாகன உரிமையாளர் உள்பட பலர்  கலந்து கொண்டனர். 

Next Story