நின்ற லாரி மீது கார் மோதியது: பெங்களூருவை சேர்ந்த 3 பெண்கள் சாவு


நின்ற லாரி மீது கார் மோதியது: பெங்களூருவை சேர்ந்த 3 பெண்கள் சாவு
x
தினத்தந்தி 11 April 2022 3:39 AM IST (Updated: 11 April 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.

துமகூரு:

துமகூரு அருகே கோரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு குழந்தை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது. காரில் இருந்த மேலும் 3 குழந்தைகள், ஒரு வாலிபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

  இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கோரா போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதுபோல உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெங்களூருவை சேர்ந்த அன்னபூர்ணா (வயது 55), ஆரத்தி (32), அதிதி (30) என்பது தெரியவந்தது. மற்றவர்களின் பெயர்கள் தெரியவில்லை. இவர்கள் 8 பேரும் காரில் பெங்களூருவில் இருந்து பாகல்கோட்டை மாவட்டம் இலகலுக்கு சென்றது தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து கோரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story