மாமியாரை மிரட்டிய பாய்லர் ஆலை ஊழியர் கைது


மாமியாரை மிரட்டிய பாய்லர் ஆலை ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 April 2022 4:32 AM IST (Updated: 11 April 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

மாமியாரை மிரட்டிய பாய்லர் ஆலை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் கலைச்செல்வி(வயது 54). இவரது மகள் சலோமி. இவருக்கும், நடராஜபுரம் ஊராட்சியில் உள்ள லூர்து நகரில் வசிக்கும் பாய்லர் ஆலை ஊழியரான சகாய சுரேசுக்கும்(41) கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
பின்னர் சகாய சுரேஷ் அதிக வரதட்சணை கேட்டு சலோமியை தொந்தரவு செய்ததால் கடந்த 2019-ம் ஆண்டு சலோமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளுக்கு சீர் வரிசையாக கொடுத்த நகைகள் மற்றும் அவருக்கு வழங்கிய நிலம், பணம் ஆகியவற்றை சகாய சுரேசிடம், கலைச்செல்வி கேட்டு வந்துள்ளார். ஆனால் சகாய சுரேஷ் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலைச்செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு திருவெறும்பூர் போலீசில் கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய சுரேசை கடந்த ஓராண்டாக தேடி வந்தனர். இந்நிலையில் கலைச்செல்வி இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சகாய சுரேசை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story